Saturday, February 17, 2007

கனடாவில் குடியேற விரும்புகிறீர்களா? (பாகம் 2)

கனடாவில் குடியேற விரும்புகிறீர்களா?

கனடா ஒவ்வொரு வருடமும் மூன்று விதமான குடிவரவாளர்களை உள்வாங்குகிறது.
அவை:

Economic Class
Family Class
Refugees

இந்த மூன்று பிரிவுகளின் கீழும் பல்வேறு பிரிவுகள் உண்டு.

இவற்றில் எதன் கீழ் நீங்கள் விண்ணப்பிக்கிறீர்களோ அதன் அடிப்படையிலேயே உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். விண்ணப்பத்துடன் இணைக்குமாறு கேட்கப்பட்டிருந்த அனைத்துப் பத்திரங்களின் நம்பகத்தன்மையும் மூலப்பிரதிதானா என்பதும் (Credibility & Authenticity) கனேடிய தூதரகத்தாலும் RCMP எனப்படும் கனேடிய பொலிசாராலும் பரிசோதிக்கப்படும். ஆகையால் போலிப் பத்திரங்களை கொடுத்து விண்ணப்பிப்பது சாத்தியமில்லை. ஒரு சிறிய சந்தேகம் வந்தாலும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதன் பிறகு எல்லாமே கடினமாகிவிடும்.

மிக முக்கியமான ஒன்று தொழில் வாய்ப்புக்கள்.

மற்றைய நாடுகளின், கம்ப்பியூட்டர்துறை தவிர்ந்த எந்த ஒரு டிகிரியையும் இவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. கம்ப்பியூட்டர் துறையிலும்கூட அவர்கள் உங்கள் டிகிரியைப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் வேலையை உங்களுக்கு செய்யத் தெரிந்தால் சரி.

மருத்துவத்துறையிலோ, வணிகத்துறையிலோ அல்லது வேறு எந்த துறையில் நீங்கள் பட்டம் பெற்று வல்லவராயிருந்தாலும் மீண்டும் இங்கு இவர்களின் சட்டதிட்டங்களுக்கமைய படித்து பரீட்சையில் தேர்ச்சி பெறவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் போகலாம்.உங்கள் நாட்டு டிகிரிக்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் தருவார்கள்.

டாக்டராக வந்து இங்கே ரெஸ்டாரண்டில் வேலை செய்பவர்களெல்லாம் உண்டு.

உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து குடியேற அனுமதித்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். இங்கு வந்த உடன் என்ன செய்யப் போகிறீர்கள் என்று யோசித்து வைத்திருங்கள்.

வீடு அல்லது அப்பார்ட்மெண்ட் வாடகை, போக்குவரத்து செலவு, மருத்துவச்செலவு மற்றும் உங்கள் படிப்பிற்கேற்ற வேலை தேடுவது என நிறைய உண்டு. ஆரம்பத்தில் காலநிலை வேறு ஒத்துக்கொள்ளாது. வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் கிடைக்காது.

குறைந்தது உங்கள் ஆறுமாத செலவுகளுக்கான பணத்தை நீங்கள் இங்கு வரும்போது விமான நிலையத்தில் காட்டவேண்டி வரலாம்.

12ம் வகுப்பு வரை கல்வியும் எல்லோருக்கும் மருத்துவமும் இலவசம். ஆனால் முதல் 3 மாதங்களுக்கு மருத்துவச்செலவை நீங்களேதான் கவனித்துக் கொள்ளவேண்டும். வாகனமோட்ட உடனே அனுமதிப்பத்திரம் கிடைக்காது. குறைந்தது 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டி வரலாம். அது உங்கள் சொந்த நாட்டில் நீங்கள் வைத்திருந்த அனுமதிபத்திரத்தைப் பொறுத்தது. மோட்டார்சைக்கிள் அனுமதிப்பத்திரம் எடுப்பதுதான் மிகக்கடினம்.

இனி கனேடிய நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா, எத்தனை புள்ளிகள் தேவை, எங்கே விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது மற்றும் அனைத்து விபரங்களுக்கும் கீழே உள்ள கனேடிய குடிவரவுத்துறை இணையத்தளத்திற்க்குச் சென்று அறிந்து கொள்ளுங்கள். நீங்களாகவே விண்ணப்பிக்கலாம். உங்கள் கேள்விகள் அனைத்திற்க்கும் இத்தளத்தில் பதிலுண்டு.

நீங்கள் எந்த தேசத்தில் இருந்து வந்தவராயிருந்தாலும் சரி எந்த மதத்தை சார்ந்தவராயிருந்தாலும் சரி உங்கள் சொந்த நாட்டில் வாழ்ந்தது போன்றே இங்கு வாழலாம். அரச, தனியார் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் எதிலும் ஆண்கள், பெண்கள் என்றோ இத்தனை வயதுக்குள் என்றோ விண்ணப்பங்கள் கோர முடியாது. இருபாலாரும் சமம். 18 வதுக்கு மேல் சட்டபூர்வமாக வேலை செய்யக்கூடிய யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், தகுதி இருந்தால்.


கனேடிய வாழ்க்கையின் சற்றே கடினமான பகுதிகளைத்தான் நான் இங்கு கோடிட்டு காட்டியிருக்கின்றேன். அதே கனேடிய வாழ்க்கையின் சந்தோஷமான பகுதிகள் நிறையவே உண்டு. அவற்றை இங்கு வந்து பாருங்கள், அனுபவியுங்கள்.

கனடா ஒரு அற்புதமான தேசம். தனிமனித சுதந்திரத்தில் அதிக அக்கறை கொண்ட நாடு. திட்டமிட்டு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்களேயானால் இது ஒரு சொர்க்கம். உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல உங்கள் வருங்கால சந்ததியினருக்கும்.

அனைத்து விபரங்களையும் இவ்வலைப்பக்கத்தில் கொண்டுவருவது சிரமமான விடயம். இந்த இணையத்தளம் ஒரு சரியான வழிகாட்டி.



கனேடிய குடிவரவுத்துறை இணையத்தள முகவரி:

www.cic.gc.ca

கனடாவைப்பற்றிய மேலதிக விபரங்களுக்கு:

http://canada.gc.ca/acanada/acPubHome.jsp?land=eng


உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

11 comments:

வடுவூர் குமார் said...

நான் முயற்சிக்கும் போது 2000வது வருடம்.
அந்த லேன்டிங் கட்டணத்தை பார்த்தவுடன்,மயக்கம் வராத குறைதான். அதுவும் அந்த பாயிண்ட் சிஸ்டம் வேறு தடுக்கியது.
இப்போது கொஞ்சம் இளக்கி நிறைய ஆட்களை இழுக்கிறார்கள், ஆனாலும் எல்லாம் முடிவதற்கு சுமார் 1.5~4 வருடங்கள் ஆகிறது- சிங்கப்பூரில்.
என்னுடைய கனவு தேசங்களில் அதுவும் ஒன்று.
கட்டுமானத்துறையில் குளிர்காலத்தில் 4 மாதம் வேலை இருக்காது என்று கேள்விப்பட்டு என்னுடைய முயற்சியை தள்ளிப்போட்டுவிட்டேன்.

ஆதிபகவன் said...

இப்பவும் லேட் கிடையாது குமார். விண்ணப்பத்தை போடுங்க. எல்லாம் சரிவரும்.

கால்கரி சிவா said...

ஆதிபகவன், சில மேல் குறிப்புகள். இஞ்ஜினியர்களை குறிப்பாக இந்திய/பாகிஸ்தானிய டிகிரிகளை இங்கே மதிக்கிறார்கள். இங்கே வந்த வுடன் இங்கே உள்ள ப்ரொபெஷனல் அசோசியஷனில் உங்கள் டிகிரியை பதிவு செய்யவேண்டும் அவர்கள் வைக்கும் Professional Ethics exam எழுதவேண்டும். அதன் பிறகு உங்களுக்கு P.Eng என்ற அடைமொழி கிடைத்துவிடும். தற்சமயம் எண்ணை கம்பெனிகளில் அனுபவம் உள்ளவருக்கு ஆல்பெர்ட்டாவில் வேலைக் கிடைப்பது சுலபம்.

மேலும் ஒரு தகவல். ஆல்பெர்ட்டாவில் கார் ஓட்டும் உரிமம் வாங்க ஒரு நாள்தான் ஆனது எனக்கு.

கனடா வருவதற்கு முன் நன்கு திட்டமிட வேண்டும். எல்லா விஷயங்களும் இணையத்தில் உள்ளன. திட்டமிட்டு வந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும். ப்ரச்னைகள் இல்லை.

ப்ரச்னை என்னவென்றால் எல்லாரும் சென்று டோராண்டோவில் அடைவதுதான்.

ஆல்பெர்ட்டா, சாச்கெஜ்ஜுவான் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை கம்மி வாழ்ககை சுலபம். வேலை வாய்ப்புகள் அதிகம்.

இப்போது ஆல்பெர்ட்டா முக்கியமாக கால்கரியில் ரியல் எஸ்டேட் கன்னாபின்னாவென உயர்ந்துள்ளது

ஆதிபகவன் said...

தகவல்களுக்கு நன்றி சிவா.

எல்லோரும் டொரான்டோ வருவதற்க்கு காரணம் ஆரம்பத்தில் இங்குதான் நிறைய வேல வாய்ப்புக்கள் இருந்தது. மற்றையது இங்குதான் எமது நாட்டுக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

எமது ஊர்ச்சூழலில் வாழ்வத்ற்க்கு ஒன்டாரியோ மாகாணம் ஒரு சரியான இடம்.

இங்கு வாகனமோட்ட அனுமதிபத்திரம் எடுப்பது சுலபமல்ல. ஒரு எழுத்து மூலமான பரீட்சையும் இரண்டு வீதிப்பரீட்சையும் உண்டு.

Anonymous said...

பதிவுக்கு நன்றி, உங்கள் பதிவை தேடுஜாப்ஸ்ல சேர்த்து இருக்கேன்...யாராவது கேள்விகளால் துளைத்தால் சுனங்காமே பதில்களை அனுப்புங்க..

நன்றி !!!!

ஆதிபகவன் said...

மிக்க நன்றி ரவி.
*****************
இப்பதிவில் குறிப்பிடப்படாத அல்லது குடிவரவுத்துறை இணையத்தளத்தில் கிடைக்காத தகவல்கள் ஏதும் தேவையானால் எனக்கு எழுதுங்கள். என்னால் முடிந்தவரை நான் உங்களுக்கு பதில் தருகிறேன்.

Sam @ Sriram said...

Hello,
I would like to express my sincere appreciation for the help and guidance given by Calgary Siva on my arrival..
The tasty food with heartfelt kindness at his home with his family is a memorable time for us.
-Sriram
I think my blog site is www.srirames.blogspot.com though I donot blog often..

Anonymous said...

இவ்வளவு கஸ்டப்பட்டு போறதைவிட ஏஜண்டுக்கு காசு கொடுத்து போகலாம்தானே.

dondu(#11168674346665545885) said...

//இவ்வளவு கஷ்டப்பட்டு போறதைவிட ஏஜண்டுக்கு காசு கொடுத்து போகலாம்தானே.//

இதைத்தான் விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாங்கறது. :)))

எல்லாத்தையும் பாத்ததுல என் மொழிபெயர்ப்பு வேலைக்கு மெனக்கெட்டு எங்கேயும் போகத் தேவையில்லைன்னுதான் படறது. சொல்லப்போனால் இப்போதைய விலைவாசியில் இந்தியாவில் இருந்து டாலரில் சம்பாதிப்பதே மேல்.

மேலும் நம்ம ஊர் நம்ம ஊர்தான் என்ற எண்ணமும் என்னுடைய விஷயத்தில் சேர்ந்து கொள்கிறது. ஏதோ காலையில் எழுந்திருக்கும்போதே கணினியை ஆன் செய்தோமா, ஆனந்தமாக கிட்டத்தட்ட வருடம் முழுவதும் ஒரு எட்டுமுழம் வேட்டியை சுத்திக் கொண்டு காலாட்டிக் கொண்டே வேலை பார்த்தோமான்னு இல்லாம என்ன வெளிதேசத்துக்கெல்லாம் போயி, என்றெல்லாம் நான் என்னைப் பொருத்தவரை கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆதிபகவன் said...

டோண்டு சார்,

எல்லோருக்கும் உங்கள மாதிரி மொழிபெயர்க்க தெரியாதே!
:))

Unknown said...

சார் எனக்கு கனடா செல்ல ரெம்ப ஆசையாக உள்ளது நான் டிப்ளோமோ படிப்பு மூன்று வருடம் முடித்து இருக்கிறேன் ஆனால் அரியர் உள்ளது மேலும் Electronics மற்றும் computer துறையில் அதிக ஆர்வம் அதன் ,தொழில்நுட்பம் வேலைகள் நன்றாக தெரியும் நான் செல்ல தகுதி என்னவெல்லாம் வேண்டும் தெரிவிக்கவும்