Saturday, February 17, 2007

கனடாவில் குடியேற விரும்புகிறீர்களா?

அண்மையில் பத்திரிக்கை ஒன்றில் கனடாவில் நிரந்தரமாக குடியேற உதவி செய்வதாக ஒரு விளம்பரத்தைக் கண்டேன். அதில் உள்ள சில தில்லு முல்லுகளைப் பற்றி தெரியவந்ததால் இந்தப்பதிவு.


கனடாவில் குடியேற விரும்புகிறீர்களா?

நீங்கள் கனடாவில் குடியேற நாம் உதவி செய்கிறோம். பல வருட அனுபவம் கொண்ட நாங்கள் எத்தனையோ பேருக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை வாங்கித் தந்திருக்கிறோம். உடனே எம்மை அணுகுங்கள் என பத்திரிக்கைகளில், தொலைக்காட்சியில் இன்னும் எத்தனையோ விதமான
விளம்பரங்களை நீங்கள் அவதானித்திருக்கக் கூடும்.

அவ்விளம்பரங்கள் சொல்வதைப் பார்த்தால் கனேடிய குடிவரவுத்துறையில் நேரடி தொடர்பு உள்ளவர்கள் போலவும் நீங்கள் மிக சுலபமாக கனடாவில் குடியேற எல்லாவற்றையும் அவர்களே செய்து தருவார்கள் என்பது போல இருக்கும்.

இவற்றை செய்து தருவதற்க்கு ஒரு கட்டணமும் வைத்திருப்பார்கள். (கட்டணம் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில்).

நம்பிவிடாதீர்கள், அவ்வளவும் ஏமாற்றுவேலை. நம்பி பணத்தைக் கொடுத்தீர்களேயானால் அவ்வளவுதான். அதிகபட்சமாக அவர்கள் செய்வதெல்லாம் உங்கள் விண்ணப்பத்தை முறையாக நிரப்பி அனுப்புவதுதான். அதற்க்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கத்தேவையில்லை.
அதை நீங்களே செய்யலாம்.

மிக மிக முக்கியமான விடயம், கனடாவில் குடியேற நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா என்பதுதான். இல்லை என்றால் குடியேறுவது மிகவும் கடினம்.

அதை எப்படி தெரிந்து கொள்வது? சற்றுப் பொறுங்கள் சொல்கிறேன்.

கனடா ஒரு பல்கலாச்சார (Multi Cultural) நாடு. கிட்டத்தட்ட 130 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு குடியேறியிருக்கிறார்கள். கனடா முற்றுமுழுதாக குடிவரவாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடு.

இங்கு லஞ்சம் இல்லை என்றே கூறலாம் (ஒன்றிரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கலாம். முன்னைய அரசின் மீது மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டும் உண்டு).

இங்கு அமைச்சர்களைவிட அந்த அமைச்சின் அதிகாரிகளுக்கே அதிக அதிகாரமுண்டு. அவசியமிருந்தாலே தவிர தனது அமைச்சின் கீழ் வேலை செய்யும் அதிகாரிகளின் செயற்பாட்டில் அமைச்சர் குறுக்கிட முடியாது. (ஒரு முறை ஒரு குடிவரவாளரின் விண்ணப்பத்தை சீக்கிரம் பரிசீலிக்கச் சொல்லி கடிதமெழுதியதற்காக பதவியை இழந்த அமைச்சரும் உண்டு.)


எங்கள் மூலமாக விண்ணப்பித்தால் மிக இலகுவாக நிரந்தரகுடியுரிமை கிடைக்க வழியுண்டு, ஆகையால் குடிவரவுத்துறையில் சொல்லி உங்கள் விண்ணப்பத்தை சீக்கிரம் பரிசீலிக்கச் சொல்கிறேன் என்பதெல்லாம் மிகப் பெரிய பொய்.


கனடாவின் மொத்த நிலப்பரப்பு - 9984670 சதுர கி.மீ (இந்தியாவைவிட 3 மடங்கு பெரியது)
கனடாவின் மொத்த ஜனத்தொகை - 33,098,932 (2006)
இந்தியாவின் ஜனத்தொகை 1,095,351,995 (July 2006) கனடாவைவிட 33 மடங்கு அதிகம்.

மொத்த ஜனத்தொகையில் 1% குடிவரவாளர்களை ஒவ்வொரு வருடமும் குடியேற அனுமதிக்கும் திட்டத்தை கனடா கொண்டிருக்கிறது. (கிட்டத்தட்ட 3 லட்சம் பேர்). ஆனால் அத்தொகை எப்பொழுதுமே எட்டப்பட்டதில்லை. 2 லட்சம் தொடக்கம் 2.20 லட்சம் வரையானோரே ஒவ்வொரு வருடமும் இங்கு வருகிறார்கள்.

கனேடிய குடிவரவுச் சட்டம் சற்று கடுமையானது (இலகுவானது எனக்கூறுவோரும் உள்ளனர்).


அடுத்தபதிவில் உங்கள் தகுதி என்ன, எங்கே விண்ணப்பிப்பது போன்ற மற்றைய விபரங்களை எழுதுகிறேன்.

12 comments:

வடுவூர் குமார் said...

இதைப்பற்றி (குடியேற்றம்) தெரிந்துகொள்வதற்கு யாகூவில் ஒரு பயணாளர் குழுமம் உள்ளது.
மேல் விபரங்கள் அங்கும் கிடைக்கும்,நீங்கள் சொல்லுங்கள் அதையும் படித்துவிடுகிறோம்.

சிவபாலன் said...

Excellent Post!

Keep going!!

ஆதிபகவன் said...

நன்றி குமார், நன்றி சிவபாலன்.

அந்த பத்திரிக்கை விளம்பரமும் எனது நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதாலும்தான் இந்தப்பதிவு.

வெளிகண்ட நாதர் said...

நல்ல பதிவு, இது போன்ற ஏமாற்றுக்காரர்களின் விளம்பரமட்டுமில்லை, கனடா தூதரகத்தில் வேலை செய்யும் நம் நாட்டை சேர்ந்த் புல்லுரிவிகளும் உண்டு, நாமே விண்ணப்பத்தாலும் , அதை கையாளும் இந்த புல்லுரிவிகள், நம்மை தொடர்பு கொண்டு, சீக்கிரம் காரியம் நடத்தி தருவதாக கூறி பணம் கறக்கும் பேமாரிகளும் உண்டு! போடா ஜாட்டான் என்று கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்!

Osai Chella said...

mikavum upayookamuLla pathivu wanpare. thayavu seythu iwtha sevaiyai thodarungkal.

Anonymous said...

நல்ல பதிவு. நம்மவர்களுக்கு நிச்சயம் இப்படியான
ஏமாற்றுக்காரர்களைத் தெரியப்படுத்துங்கள்.

ஆதிபகவன் said...

வெளிகண்டநாதரே நன்றி. தூதரகத்தில் நடக்கும் ஒரு விடயம் பற்றி நான் கேள்விப்பட்டேன். பிறகு எழுதுகிறேன்,
பாருங்கள்.

ஆதிபகவன் said...

நன்றி செல்லா, அனானி. ஏமாற்றுக்காரர்களை தவிர்ப்பது மட்டுமல்ல நாமே எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளவும்தான் எழுதினேன்.

வினையூக்கி said...

தகவலுக்கு நன்றி ஆதிபகவன். எனக்கு ஒரு முறை தி.நகரில் இருக்கும் ஒரு கன்சல்டன்சிக்குப்போன அனுபவம் ஊண்டு. அவர்கள் கேட்ட தொகைக்கு எனக்கு கனடா மேல் இருந்த ஆர்வமே போய் விட்டது

Anonymous said...

இதைவிட இன்னுமொரு தில்லு முல்லு
நடந்திருக்கிறது அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை குறிவைத்து

கனடாவில் குடியேறவிரும்புகிறீர்களா
என பத்திரிகை விளம்பரத்தில்
இந்த படிவத்தை நிரப்பி இதனுடன்
$200 US பணத்துடன் money order
அணுப்பி வைக்கவும் விரைவில்
அனைத்து தகவல்களும் அனுப்பி
வைக்கப்படும். சில வாரங்கள்
சென்று ஒரு கடிதம் வருகிறது அதில்
ஒரு பெண்ணின் போட்டோவும்
விலாசமும். மேலதிக தகவல்களுக்கு
இனிமேல் இந்த முகவரியுடன்
தொடர்பு கொள்ளவும் இவர்தான்
உங்களை இஸ்பொன்சர் செய்வார்.
இந்த முகவரியுடன் தொடர்பு கொண்டால் அப்படி யாரும் இருக்க
மாட்டர்கள்.

இந்தியாவிலிருந்து point sistem கல்வி
தகமை அடிப்படையில் விசா பெற்று
இங்கு வந்து (பட்ட தாரிகள்)படும்
அவஸ்தைகள் சொல்ல முடியாத சோக
கதைகள் ஏராளம்.

ஆதிபகவன் said...

நன்றி வினையூக்கி. இப்பதிவின் இரண்டாம் பாகத்தை வாசியுங்கள்.

கார்த்திக் பிரபு said...

nalla eluhureenga time kidaicha namma pakm vandhu parunga