Friday, June 8, 2007

சற்றே சிந்தித்து நடந்து கொள்ளுங்கள். இறுதி எச்சரிக்கை!

குளோபல் வார்மிங் - GLOBAL WARMING

ஐபிசிசி (INTERGOVERMENTAL PANEL ON CLIMATE CHANGE) அமைப்பின் விஞ்ஞானிகள் மாநாடு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கடந்த மே மாதம் நடந்து முடிந்திருக்கிறது.

அதில் பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி பத்து லட்சத்தில் 400 பகுதிகளாக இருக்கிறது. இது 2015ல் 445 என்பதாக உயரும். அப்போது 3.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் கூடுதலாகும். இப்படியே போனால் 2100ம் ஆண்டில் 11 டிகிரி பாரன்ஹீட் என்று உயர்ந்துவிடும். 445 என்பதிலேயே என்று இந்த பூமியை காப்பாறி வைத்தால்கூட, 2050ம் ஆண்டில் இரண்டு மில்லியன் மக்களுக்கு குடிக்க குடிநீர் கிடைக்காது. அரிய வகை உயிரினங்கள் 20-30 சதவிகிதம் அழியக்கூடும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சற்றே சிந்தித்து நடந்து கொள்ளுங்கள். 2050 ஆண்டு என்பது வெகுதூரத்தில் இல்லை. உலக வெப்பமயமாக்கலைத் தடுக்க உங்களால் முடிந்த நடவடிகைகளை எடுங்கள்.

3 comments:

Priya said...

//மக்களுக்கு குடிக்க குடிநீர் கிடைக்காது. அரிய வகை உயிரினங்கள் 20-30 சதவிகிதம் அழியக்கூடும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.//

ஆமாங்க..இப்படியே போனா என்ன ஆகும்னு பயமாதான் இருக்கு...

மாசிலா said...

அடிக்கடி நம்மக்களுக்கு இப்படி விழிப்புண்ர்வு ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும். சுயநல உலகம் ஆகிவிட்ட இந்த நுகர்வோர் சமுதாயம் இதை பெரிது படுத்துமா என்பது ஒரு கேள்விக்குறியே!

அரசாங்கம் புதிய சட்டங்கள் இயற்றவேண்டும். சீரிய கண்கானிப்புகள் வேண்டும். பொதுநல சேவை அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் அனைவரும் இதில் பங்கெடுக்கவும் வேண்டும்.

நன் வளரும் இளம் தலைமுறைகளுக்கு நல்ல உலகம் அமைத்து தரவேண்டியது நன் அனைவரின் கடமை.

நல்ல விழிப்புண்ர்வூட்டும் பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆதிபகவன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதற்குக் கூட மாநாடு கூட்டியா சொல்ல வேண்டும். ஒரு நாள் தொலைக்காட்சிச் செய்தியை பார்த்தால் தெரிகிறதே!
வெள்ளம், காட்டுத்தீ,பூகம்பம்,கடற்பெருக்கு
போதாதா? நாமுணர..
ஏதோ நடப்பதைக் கண்டு கொள்ள வேண்டியதே!!