Saturday, May 5, 2007

பருவ நிலை மாற்றத்தினை எதிர்கொள்ள அரசியல் நடவடிக்கை அவசியம் - சர்வதேச மாநாட்டில் கருத்து

உலகில் ஏற்பட்டு வரும் பருவ நிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள உலகில் போதுமான நிதி மற்றும் இதற்கான அறிவுத் திறன் இருப்பதாகவும், ஆனால் இதை உடனடி அரசியல் நடவடிக்கையின் மூலமே செயல்படுத்த முடியும் எனவும் சர்வதேச விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் கொள்கை ஆலோசகர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு ஒன்று முடிவு கூறியுள்ளது.

உலகில் எரிபொருளின் உபயோகத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும், மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், அணு மின்சக்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், உலக வெப்பம் அதிகமாவதை இரண்டு பாகை செல்சியஸ் அளவிற்கு கட்டுப்படுத்தி வைக்கலாம் என ஐ நாவின் பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான உயர்மட்டக் குழுவின் மாநாடு கூறியுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்ற நுகர்வோர் வாழ்க்கை முறையினை வளர்ந்து வரும் நாடுகளும் பின்பற்ற முனைந்தால், அதை பூமி சமாளிக்க இயலாது எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா எரிசக்தியைப் பயன்படுத்துவதைப் பின்பற்றி தாங்களும் அதேபோல செய்ய விரும்பவில்லை என மாநாட்டில் பங்குபெறும் சீனப் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

நன்றி: பிபிசி

2 comments:

Haran said...

ஆரசியல்வாதிகள் வந்து முடிவெடுக்கும் வரை காத்திருக்காது, நாம் அனைவருமே இதனைக் கருத்தில் கொண்டு அதன்படி நடக்க வேண்டியது எம் அனைவரதும் தார்மீகக் கடமை என்பது எனது கருத்து.

தொடர்ந்தும் உங்களது பதிவுகளை எழுதுங்கள்...

ஆதிபகவன் said...

நன்றி ஹரன்.

நான் அனைவருமே உணர்ந்து செயல்பட்டால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணலாம். அப்படி ஒரு முடிவு காணுவது அவசியமானது/ கட்டாயமானது