சன் செய்திகள்!
சன் செய்திகள்! என்றதும் ஏதோ செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் என்று பார்த்தீர்களா? இல்லை, இது சன் செய்திகளின் செய்தி வாசிப்பவர்களைப் பற்றியது.
அது ஏன் மலச்சிக்கலுடன் செய்தி வாசிக்க வந்தவர்கள் போல் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள்? ஆண்கள்/பெண்கள் எல்லோருமே அடித்தொண்டையில் செய்தி வாசிக்கிறார்கள் . அது ஏன் என்று புரியவில்லை.
பார்க்கும் பொழுது பாவமாக இருக்கிறது.
செய்திகள் வாசிக்கும் போது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அடித்தொண்டையில் வாசிக்க வேண்டும் என்று (சன்) விதிமுறை ஏதும் உள்ளதா?
சற்றே சிரித்த முகத்துடன் (செய்திகளுக்கு ஏற்ப) இறுக்கமில்லாத குரலில் வாசிக்கலாம்.
BBC, CNN, CBC சேனல்கள் நல்ல உதாரணம்.
பார்க்கலாம் எதிர் காலத்தில் மாறுகிறார்களா என்று?
2 comments:
என்னங்க இது!! அது அவர்கள் ஸ்டைல், இது இவர்கள் ஸ்டைல். நீங்க இந்த மாதிரி சொல்லுவீங்க தெரிஞ்சு தானே, சும்மா லைவ் நீயூஸ் படிக்கற மாதிரி பேப்பர் மாத்திக்கறது, பிரேக்ல ரெண்டு பேரும் பேசக்கிறமாதிரி சீன் போடறது , பென் & பேப்பர் எல்லாம் சுத்தி ஸ்டைல் காம்மிக்கறது.. ஏதாவது கிலிப்பிங் போடும்போது சாலியா சிரிக்கறதுன்னு... இதுக்கு மேல என்ன செய்ய சொல்லறீங்க ...
:))))))))))))))))))))))
ஏங்க எங்க ஊர்ல தெரியிர சன் டிவி தானே உங்க ஊர்லேயும் தெரியுது!! :))))))))
Post a Comment