Monday, January 14, 2008

2008ம் ஆண்டு என்னவெல்லாம் நடக்கும்!!

2008ம் ஆண்டு என்னவெல்லாம் நடக்கும் என்று கனடாவில் வசிக்கும் Douglas Cottrell என்பவர் கூறுவதைப் பாருங்கள். அவர் டிசம்பர் 31ம் 2007ல் இவற்றைக் கூறிவிட்டார். வேலைப்பளு காரணமாக ப்ளாக்கில் சற்று தாமதமாக பதிவு செய்கிறேன்.

இவரை “The man with the X-ray eyes” என்று கூறுகிறார்கள். CFRB 1010 ரேடியோ Talk Showவில் இவரது பேட்டி இடம் பெற்றது. அவர் கூறியதை வரிசைப் படுத்தியிருக்கிறேன் பாருங்கள். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.

1. ஹிலரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்வெற்றி பெறுவார்.

2. ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி கொர்பச்சேவ் மீண்டும் அரசியலுக்கு வருவார்.

3. பின்லாடன் உயிருடனோ பிணமாகவோ பிடிபடுவார்.

4. தவறுதலாக ஒரு அணுவெடி விபத்து மத்தியகிழக்கு நாடுகள் அல்லது பாகிஸ்தான் எல்லையில்இடம்பெறும்.

5. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $900 மேல் உயரக்கூடும்.(இது நடந்துவிட்டது)

6. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸை கொலை செய்ய ஒரு முயற்ச்சி நடக்கக்கூடும்.
இம்முயற்ச்சி ஒரு பேட்டியின் போது ஏற்படலாம். அப்பொழுது அவரது அப்பாவும்(முன்னால் ஜனாதிபதி) அருகில் இருக்கக்கூடும்.

7. ஆபிரிக்காவில் இதுவரை வைரங்கள் கண்டுபிடிக்கப்படாத ஒரு நாட்டில் வைரங்கள் கிடைக்கக்கூடும்.

8. கனடாவின் மேற்க்குக்கரையை (பிரிட்டிஷ் கொலம்பியா) சுனாமி தாக்கக்கூடும். இது ஒரு வருஷத்திற்க்கு சற்று மேலான காலத்தில் நடைபெறும்.

9. அதிக அளவிலான அமெரிக்கர்கள் கனடாவில் குடியேறுவார்கள்.

10. மசகு எண்ணையின் விலை ஒரு பாரல் $140-$150 வரை உயரக்கூடும்.

11. கலிபோர்னியாவின் கவர்னர் ஆர்னோல்ட் மாரடைப்பினால் பாதிக்கப்படுவார்.

12. கனடாவில் தற்பொழுது 6% இருக்கும் வட்டிவிகிதம் 30%வரை உயரக்கூடும்.

13. கனேடிய வரிவிதிப்பில்(GST)மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படும்.(பிரதமர் ஹார்ப்பர் 7%லிருந்து 5% ஆக வரியை குறைத்திருந்தார். இனிமேல் வரியில் எதுவும் செய்வதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இன்னும் சிலவற்றை Douglas Cottrell கூறியிருந்தார். அவை அதிக முக்கியமில்லாததால் விட்டுவிட்டேன்.

இவர் கூறியதை எல்லாம் நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை. சில சம்பவங்கள் நடக்கலாம்.(காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததுபோல்).

இவரைப்பற்றி இணையத்தளத்தில் தேடினால் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன.

இனி நம்புவது உங்கள் இஷ்டம்

2 comments:

Unknown said...

ஏன் இந்தியாவை பத்தி எதுவும் சொல்லவில்லை?

ஓ....அப்படி சொல்ல இங்கேயே நிறைய பேர் இருக்கிறதால சொல்லவில்லை போலிருக்கு.

சின்னப் பையன் said...

ஆமாங்க...காலங்கார்த்தாலே வரிசையா எல்லா டிவி-யிலேயும் வருவாங்களே...